Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

‘டல்’ அடிக்கும் கிரிடிட் கார்டு.. எகிறும் தங்க நகைக்கடன்! - ஆர்பிஐ வெளியிட்ட தகவல்

‘டல்’ அடிக்கும் கிரிடிட் கார்டு.. எகிறும் தங்க நகைக்கடன்! - ஆர்பிஐ வெளியிட்ட தகவல்
எகிறும் தங்க நகைக்கடன்

இந்தியாவில் கடந்த ஆகஸ்டில் தங்க நகைக்கடன் வேகமான வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், கிரெடிட் கார்டு, நுகர்வோர் சாதனக் கடன்களின் வளர்ச்சி மந்தமடைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

இந்தியாவில் கடந்த ஆகஸ்டில் தங்க நகைக்கடன் வேகமான வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், கிரெடிட் கார்டு, நுகர்வோர் சாதனக் கடன்களின் வளர்ச்சி மந்தமடைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நகைக் கடன் என்பது அடமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதால் கட்ட தவறும் பட்சத்தில், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பணத்தை மீட்டெடுக்க முடியும். இதனால், பாதுகாப்பற்ற தனிநபர் கடன் பிரிவுகளைக் காட்டிலும் சில வங்கிகள், பாதுகாப்பான கடன்களுக்கு அதிக கவனம் செலுத்துகின்றன.

கடன் தரவுகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆகஸ்டில் தங்க நகைகளுக்கு எதிரான கடன் 83.20 சதவீதம் அதிகரித்து ரூ.5.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான 130 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது தற்போதைய வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. இருந்தபோதிலும், தனிநபர் கடன் பிரிவுகளில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் தங்கக் கடனும் ஒன்றாக உள்ளது.
மேலும் ஆகஸ்டில் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 3.60 சதவீதம் மட்டுமே உயர்ந்து சுமார் ரூ.3 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 4.40 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.

இதே போல், நுகர்வோர் சாதனங்களுக்கான கடன் வளர்ச்சியும் ஆகஸ்டில் 2.40 சதவீதமாக இருந்தது. விருப்பச் செலவுகளுக்கான கடன் தேவையில் ஏற்பட்ட மந்தநிலையை இது காட்டுகிறது. இதற்கு மாறாக, சொத்துகளை அடமானமாகக் கொண்டு பெறப்படும் கடன்களுக்கு வலுவான தேவை காணப்படுகிறது. .

ஒட்டுமொத்த தனிநபர் கடன் வளர்ச்சி ஆகஸ்டில் 16.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 11.90 சதவீதமாக இருந்தது. மொத்த தனிநபர் கடன் நிலுவை ரூ.72.90 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் பிரிவுகளிலும் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


கடந்த ஜூலையில் தங்கக் கடன் நிலுவை ரூ.5.52 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது ரூ.1.24 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது.வீட்டுக் கடன், தங்கக் கடன் போன்ற பாதுகாப்பான கடன்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கிரெடிட் கார்டு மற்றும் விருப்பச் செலவுகளுக்கான சில பாதுகாப்பற்ற கடன் பிரிவுகளின் வளர்ச்சி மந்தமாகியுள்ளது.
முந்தைய செய்தி
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடலாம்: தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம்
அடுத்த செய்தி
புதிய பரிணாமம்! சுற்றுலாத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ! என்ன ஸ்பெஷல்?

தொடர்புடைய செய்திகள்